வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப்பரீட்சை 2021 இற்கான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படும் வழிகாட்டலும் ஆலோசனையும் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இப்போட்டிப்பரீட்சை நடத்தப்படுகிறது.
குறித்த துறையில் 47 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் உளவியல் (Psychology) பாடத்தினை பிரதான பாடங்களில் ஒன்றாக / சிறப்பு பாடம் ஒன்றாகக் கொண்ட பட்டம் ஒன்றை பெற்றிருத்தல் *அத்துடன்* க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ் மொழி அல்லது சிங்கள மொழியில் சித்தியடைந்திருத்தல் என்பன தகைமைகளாக கொண்ட 18 - 35 வயதுக்குட்பட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதித் திகதி 24. 05. 2021 ஆகும்.