All Stories
சீஷெல்ஸில் சிறை அதிகாரிகளாக பணிபுரிய ஆட்களை ஆட்சேர்ப்பு செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம்,பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் தமது சேவைக் காலத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கனடாவில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொமோரஸ் நாட்டு கொடியுடன் ஓமான் கடற்பிராந்தியத்தில் பயணித்த எண்ணெய் கப்பல் மூழ்கியதில் 3 இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்காக முகவர்களுக்கோ தனிநபர்களுக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன்னதாக அந்த முகவரகம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகம் மீண்டும் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் வாக்களிக்கும் உரிமைக்கான அணுகலை உறுதிசெய்ய எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் மற்றும் சவால்கள் குறித்து , புலம்பெயர்வாளர்களின் குரல் (Voice of Migrant-VoM) வலையமைப்பு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (PAFFREL) நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ரோஹன ஹெட்டியாராச்சியுடன் ஜூன் (16) அன்று PAFFREL அலுவலகத்தில் கலந்துரையாடலை நடத்தியது.