இலங்கையர்கள் சிரியா மற்றும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம் என அறிவித்தல்!
லெபனானிற்கும் சிரியாவிற்கும் பயணம் மேற்கொள்வதை இலங்கையர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவில் தற்போது நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை இலங்கை பிரஜைகள் அந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லெபனானிலும் சிரியாவிலும் உள்ள இலங்கையர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சு வெளியில்நடமாடுவதை குறைத்துக்கொள்ளுதல் பெய்ரூட் டமஸ்கஸில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் தொடர்பை பேணுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அவசர தொடர்பு இலக்கங்கள் 0094 771102510
Mr. Sanath Balasuriya; 0094 718381581
Ms. Priyangi Dissanayake; 00961 81485809,
Mr. Fahd Hawwa and Honorary Consul of Sri Lanka in Damascus, Dr. Al Droubi and ; Email ID: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.; Phone: 00963 944499666, 00963 933858803.