ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி, பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
All Stories
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும்போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணைவழி மூலம் விண்ணப்பிக்க முடியும் என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வீட்டுக்கனவை நனவாக்கும் வகையில் அவர்களுக்கான வீடமைப்புத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தற்போது மேற்கொண்டுள்ளார்.
தொழில் வாய்ப்புகளுக்காக இந்த வாரம் 155 இலங்கையர்கள் கொரியாவுக்கு பயணமாகவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண அலுவலக மட்டத்திலான விழிப்புணர்வு நிகழ்வு ஹாலிஎலயில் அமைந்துள்ள ஊவா மாகாண அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பிரான்ஸில் சிறந்த 'பிரான்ஸ் பாண்' தயாரிப்பாளர் என்ற விருதை இலங்கையரொருவர் பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் அந்நாட்டு ஜனாதிபதிக்கு பான் தயாரித்து விநியோகிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
சுற்றுலா வீசா பயன்படுத்தி மலேசியாவில் பணிக்காக சென்ற இலங்கைப் பெண்ணொருவர் (44) அடுக்குமாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
தொழில் நிமித்தம் குவைத் சென்று அந்நாட்டு சட்டவிதிகளை மீறிய 32 பெண்கள் இன்று மீண்டும் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சூடானில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு போர்ட் சூடானில் உள்ள சவூதி அரேபிய அரச செயற்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது.
சட்டவிரோதமாக பாதுகாப்பு இல்லத்தை விட்டு வெளியேறும் எந்தவொரு வீட்டுப் பணிப்பெண்களையும் மீண்டும் பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று ஓமானுக்கான இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.