புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்: அமைச்சர் எதிர்ப்பு

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்: அமைச்சர் எதிர்ப்பு

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார்.

கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, கியூபெக் மாகாணத்தில் குடியமர்ந்துள்ளவர்கள் உட்பட, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை பெடரல் அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்: அமைச்சர் எதிர்ப்பு | Francois Legault Immigration France

தற்போது கியூபெக்கில் வாழ்ந்துவரும், அகதி நிலை பெறக் காத்திருப்பவர்களில் பாதி பேரை, பிற மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஒரு ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால், வழக்கமாக புலம்பெயர்தலுக்கு எதிராக கருத்துக்கூறும் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லரே, கியூபெக் மாகாண பிரீமியரான Legaultஇன் கருத்தை விமர்சித்துள்ளார்.

கியூபெக் மாகாண பிரீமியரான Legaultஇன் கருத்துக்கள், மனிதத்தன்மையற்றவை, அர்த்தமற்றவை என்று கூறியுள்ள மார்க் மில்லர், அரசு மக்களை கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்யாது என்றும், Legault, புலம்பெயர்தலை அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்: அமைச்சர் எதிர்ப்பு | Francois Legault Immigration France

மூலம் - கனடாமிரர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image