யுத்தம் நிலவும் லெபனான் நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான அவசர உதவி இலக்கமொன்றினை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல் வான் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் இவ் அவசர உதவி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதல்களில் 492 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 1,645 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, லெபனானில் 1975-90 உள்நாட்டுப் போருக்குப் பிறகு நடந்த மோதலின் மிக மோசமான நாள் தாக்குதல் இதுவாகும் என்று கூறப்படுகிறது.
நெருக்கடிக்கு மத்தியில், லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் அதன் குடிமக்களை உதவிக்கு பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
சனத் பாலசூரிய முதலாம் செயலாளர் - 0096170386754
பிரியங்கி திஸாநாயக்க, மூன்றாம் நிலை செயலாளர் - 0096181549162
எம்.ஏ.எம். பஹாத், மொழிபெயர்ப்பாளர் - 0096181363894