All Stories
வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
தெற்கு லெபனானில் பணிபுரியும் இலங்கை பிரஜைகள் உடனடியாக பெய்ரூட்டில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் தங்களது தகவல்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எல்லையில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பெண்கள் இருவரும் மீண்டும் ஜோர்தானுக்கு அனுப்பப்பட உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
லெபனானின் பெய்ரூட் நகரில் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்தமையினால் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
காஸாவை அண்மித்த பகுதியில் இருந்து 13 இலங்கையர்கள் வௌியேற்றப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
கடந்த 2021ம் ஆண்டு 61 இலங்கையர்களை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்த நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட அலகொன்றை ஸ்தாபிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் ஹூங்போயிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் காணாமல் போனதாக கூறப்படும் இரு இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுள்ளனர்.
ஜோர்தான் - இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இலங்கை பெண்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு Specified Skilled Worker பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜப்பானின் IM Japan நிறுவனத்திற்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது.