மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம்.
All Stories
அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மலையக பெருந்தோட்ட சமூகத்தை முழுமையாக நாட்டின் விரிவான சமூகப்; பொருளாதாரக் கட்டமைப்பில் இணைத்துக் கொள்வதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெற்றியடையச் செய்வதற்கு இயலச் செய்யும் வகையில் அரச முயற்சிகளை வழிநடாத்துவதற்கான அடிப்படை ஆவணமான மலையகப் பெருந்தோட்ட சமூகத்திற்கான பட்டயம் வரைவாக்கம் செய்யப்பட்டு அமைச்சரவையினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலின் போது மானியங்கள் மற்றும் சம்பள உயர்வுகள் தொடர்பான அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுவதாகும் என ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா TISL வலியுறுத்துகிறது.
பகிரங்க சேவை ஆணைக்குழுவில் உறுப்பினர் ஒருவரின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கு விருப்புடைய தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வாழ்க்கைச்செலவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு தனியார் துறையின் அடிப்படை சம்பளத்தை 17ஆயிரத்தி 500 ரூபாவாக நிர்ணயிக்க தொழில் அமைச்சு தீர்மானித்து சட்டமூலம் சமர்ப்பித்துள்ளது என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
குறைந்த எண்ணிக்கையிலான வெற்று கடவுச்சீட்டுகள் உள்ளமை காரணமாக கடவுச்சீட்டுகளை வழங்குவதை மட்டுப்படுத்த வேண்டியுள்ளமையால், கட்டாய காரணத்திற்காக மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் புதிய பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய கடவுச்சீட்டுகள் நாட்டுக்குக் கிடைக்குமென குடிவரவு - குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இருக்கும் பதில் அதிபர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் இடம்பெறுவதால், இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும் வரையில் தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிலிருந்து அரச ஊழியர்களுக்கு 24 – 50 சதவீதம் வரையிலான சம்பள உயர்வுவழங்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச சேவையின் அடிப்படைச் சம்பளம் கனிஷ்ட தரத்தினருக்கு 24% இலிருந்து 50% வரை அதிகரிக்கப்படும் என சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்தார்.