பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று(21) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஆசிரியர் சுந்தரலிங்கம் பிரதீப் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராவார்.

2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் பொதுத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது விருப்பு உறுப்பினராக 112,711 வாக்குகளை பெற்று அவர் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளராக அவர் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image