அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று சனிக்கிழமை (08) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
All Stories
மூத்த ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சந்தேக பர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்ற சட்டமா அதிபரின் அறிவித்தல் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை நாட்டுக்கு முன்வைக்குமாறு கோரி சுதந்திர ஊடக இயக்க தொழிற்சங்கம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்காக எதிர்காலத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட குடியிருப்பு அமைப்பை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் வடக்கு மாகாணத்தை நோக்கி பல்வேறு புலம்பெயர் முதலீட்டாளர்கள் வருகின்றனர்.
ஊழியர் சேமலாப நிதியத்தின் கீழ் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கான (AH பதிவு) புதிய முறையை தொழில் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி பிரதிநிதிகள் இலங்கை பிரதமருடன் கலந்துரையாடல்.
அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பாராளுமன்ற பணியாளர் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ஜனவரியையிட்டு வியாழக்கிழமை (30) மட்டு காந்தி பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் ஊடகவியலாளர்கள் தீப்பந்த ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையின்றி விரிவுரைகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
சலுகைகள் மற்றும் ஆதரவின் அடிப்படையில் நீதி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

