தொழில் பிரதி அமைச்சரான தொழிற்சங்கத் தலைவர்

தொழில் பிரதி அமைச்சரான தொழிற்சங்கத் தலைவர்
புதிய அரசாங்கத்தின் தொழில் பிரதி அமைச்சராக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க நேற்று (21) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
 
மஹிந்த ஜயசிங்க கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு 137,315 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.
 
கடந்த காலத்தில் அதிபர்-ஆசிரியர் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல பிரச்சினைகளை தொடர்பில் தொழிற்சங்க நடவடிக்கை முதல் போராட்டம் வரையான செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கிய தொழிற்சங்க தலைவர் இவராவார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image