கடவுச்சீட்டு வரிசைக்கு தீர்வாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்ள Online இல் திகதி மற்றும் நேரத்தை பதிவு செய்யும் முறைமையை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
All Stories
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தேசிய தேர்தல்களின் போது, சம்பளம் மற்றும் சொந்த விடுமுறைகள் என்பவற்றை இழக்காமல் தத்தமது வாக்கினை அளிப்பதற்காக விடுமுறை வழங்குதல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5000 ரூபாய் கொடுப்பனவையும் எதிர்வரும் ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடியும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தூதுவர்கள் சேவைக்காக கடந்த அரசாங்கத்தினால் அரசியல் ரீதியில் நியமனம் வழங்கப்பட்டுள்ள 15 வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.
தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் முன்னோடியாகப் பங்காற்றிய சிவில் நடவடிக்கை சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவையை கௌரவிக்கும் நிகழ்வு 2024. அக்டோபர் 23, பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை பத்திரிகை ஸ்தாபன (SLPI) கேட்போர் கூடத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
அதிபர் சேவை சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் அமைப்புக்களின் கூட்டமொன்றில் செய்தி சேகரிக்க அழைக்கப்பட்ட லங்காதீப பத்திரிகையின் ஹக்மன பிராந்திய ஊடகவியலாளர் யசந்த ஆரியசேன தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கப்படுவதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது.
அரச சேவையில் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அரச சேவை டிஜிட்டல்மயப்படுத்தப்பட வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற நிலைமை மற்றும் பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பான அறிவித்தலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.