தொழிற்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை
தொழிற்கல்வியானது பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை வழங்குவதால் பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அது அமைய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே (22) நாரஹேன்பிட்டி நிபுணத்தா இல்லத்தில் உத்தயோகபூர்வமாக பணிகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கல்வியானது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய விடயப் பரப்பாகும். கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி என கருதப்பட்டாலும் இம்மூன்றும் ஒருங்கிணைந்து செல்லவேண்டிய முழுமையான கல்விக் கட்டமைப்பின் மூன்று பிரிவுகளாகும். முக்கியமாக தொழிற்கல்வி தொடர்பில் எமது அரசாங்கம் விசேட கவனத்தை செலுத்துகின்றது.
எமது நாட்டின் சாம்பிரதாயமானது தொழிற்கல்வியை வேறு ஏதும் தொழில்கள் செய்ய முடியாது எஞ்சுகின்ற மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்ற துறையாகவே பார்க்கப்படுகின்றது. இத்தகைய கருத்தானது நிச்சயமாக மாற்றப்படவேண்டும். தொழில் கல்வி விசேடமாக பொருளாதாரத்தில் நேரடியாகப் பங்களிப்பு செய்கின்ற விடயமாகும்.
பாடசாலைக் கல்வி முதல் உயர் கல்வி வரை சிறப்பான எதிர்காலத்தை அடையக்கூடிய ஒரு கௌரவமான தெரிவாக அமைய வேண்டும்.
மக்கள் எமது கொள்கைகள் தொடர்பில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அவற்றை செயற்படுத்தவேண்டுமானால் நிறுவன ரீதியான வியூக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.