All Stories
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.
பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
வெலிகடை காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்ததாக கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்ணான ஆர்.ராஜகுமாரி என்பவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
இன்று(24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய அதிகாரிகளின் ஒன்றிணைந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பணிப்பெண் ராஜன் ராஜகுமாரி, கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணம் நூற்றுக்கு 257 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.