திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும் - ஜனாதிபதி

திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும் - ஜனாதிபதி
திருப்தியான அரச சேவை உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் தெரிவித்துள்ளார்.
 
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
 
இலங்கை வரலாற்றில் அரச ஊழியர்கள் அதிகமாக அரசாங்கத்திற்கு வாக்களித்த தேர்தல் என்பதை இந்த மக்கள்ஆணையில் நாம் காண்கிறோம். எமது அரச சேவை தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல மனப்பாங்கு கிடையாது. அரச சேவை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சில பாதகமாக எண்ணங்கள் காணப்படுகிறது.
 
அரச சேவையில் இருப்போருக்கு தமது பணி தொடர்பிலும் திருப்தி கிடையாது. அதனால் மக்களை திருப்திப்படுத்தாத அரச சேவையும் சேவையில் ஈடுபட்டுள்ளோர் திருப்தி அடையாத அரச சேவையும் தான் எம்மத்தியில் எஞ்சியுள்ளது. அதனால் இரு தரப்பிலும் திருப்தியான அரச சேவையை உருவாக்குவது எமது முழுமையான பொறுப்பாகும்.
 
இந்த மக்கள் ஆணையின் போது சிறந்த அரச சேவைக்காக எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் மறுசீரமைப்புகளுக்கான அவர்களின் பக்கசார்பை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். எமக்கு பலமான அரச சேவையின்றி முன்னோக்கிச் செல்ல முடியும் என்று நாம் கருதவில்லை.உலகில் அனைத்து நாடுகளும் புதிய திருப்புமுனையின் போதும் அரசியல் தலைமையின் வழிகாட்டலைப் போன்றே அரச துறையின் செயற்பாடும் முக்கியமானதாகிறது.
 
அரசியல் கட்சிகளுக்கு எத்தகைய எதிர்பார்ப்புகள் இலக்குகள் இருந்தாலும் அதற்கு உகந்த அரச சேவையொன்றை உருவாக்க முடிந்தால் மாத்திரமே அவற்றை சாத்தியமாக்க முடியும். அதனால் செயற்திறனான மக்களின் விருப்புக்கேற்ற அரச சேவை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம்.அதற்கு அரச சேவையில் இருந்தே பாரிய மக்கள் ஆணை கிடைத்துள்ளது.அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். - என்றார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image