All Stories
130 வருடங்கள் பழமையான நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியில் இணையும் நபர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்தார்.
தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேசிய மட்டத்திலான தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை மீண்டும் நிறுவி, புதிய தனித் தொழிலாளர் சட்ட உருவாக்கல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்குமாறு புதிய தொழில் அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சில தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் கூறியுள்ளனர்.
தம்மை கைதுசெய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதென புலனாய்வு ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்
பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து சமர்ப்பிக்கப்படும் வரவு - செலவு திட்டத்திலேயே அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.
இலங்கையின் தொழிற்படையில் பெரும்பான்மையானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கையில் தொழில்சார் உரிமைகள் இல்லை.
இலங்கை மற்றும் இஸ்ரேல் இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
2023-2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை செலுத்தி முடிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.