அரச ஊழியர்கள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்க தவறினால், குறித்த 5 நாட்களுக்குப் பிறகு வரும் முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
All Stories
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்காகத் தேசிய சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று முதல் கட்டமாக 1350 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும்,கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மலையக மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழும் நிலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் உதயமாகும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,350 ரூபாவை அடிப்படை சம்பளமாக மாத்திரம் வழங்க இன்றைய சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை வழங்குவது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்கும் செயல்முறையை ஆராய்வதற்காக குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று போலந்து நாட்டுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வௌிநாட்டு விடுமுறை நிறைவடைந்த பின்னரும் உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காத அரச ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.