காணி, வீட்டு உரிமையுடன் மலையகத்தில் மறுமலர்ச்சி - பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்

காணி, வீட்டு உரிமையுடன் மலையகத்தில் மறுமலர்ச்சி - பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
" தொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் இராசதானிகளாக இருந்த மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் தயார்." என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதியளித்துள்ளார்.
 
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு இடம் பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு  கருத்து வெளியிட்ட போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர், வீடு மற்றும் காணி உரிமையை வழங்குவதற்குரிய அவசியத்துவத்தையும் வலியுறுத்தினார். 
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கப்பெறவில்லை என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
 
பெருந்தோட்டங்களில் உள்ள மக்களுக்கு வீடுகள் இல்லை காணியும் இல்லை சரியான முறையில் சம்பளம் கிடைப்பதில்லை போஷாக்கின்மை அதிகரித்துள்ளது. எனவே பாரிய வேலைத்திட்டங்களை அங்கு செய்ய வேண்டி உள்ளது. நாம் அதற்கு தயாராக இருக்கின்றோம். - என்றார்.
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image