டிசம்பர் 01 ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினமாகும்.
36வது எயிட்ஸ் தின தேசிய நிகழ்வு இன்று (01) கொழும்பு காலி முகத்திடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
'உரிமைகளைப் பாதுகாப்பும் - எய்ட்ஸை ஒழிப்போம்' என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாகும்.
இந்த நிகழ்வை முன்னிட்டு நடைப்பயணம், எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நடைப்பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் வாயு பலூன்களை பரக்க விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
எயிட்ஸ் நோய் கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த மனோபாவத்துடன் ஒப்பிடுகையில், இந்நோய் தொடர்பான சமூக மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
எயிட்ஸ் நோய் கண்டறியப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்த மனோபாவத்துடன் ஒப்பிடுகையில், இந்நோய் தொடர்பான சமூக மனப்பான்மையிலும் நோயினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிலும் பெரும் மாற்றம் காணப்படுகிறது. இது மிகவும் சாதகமான சூழலாகும். எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து சமூகம் அச்சத்திலும் சர்ச்சையிலும் உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிராகரிக்கப்படுகின்றனர்.
ஆனால் தற்போது, சுகாதார சேவைகளில் புதிய கண்டுபிடிப்புகள், சிகிச்சை சேவைகளின் வளர்ச்சி மற்றும் சமூகத்தில் நல்ல உரையாடல் ஏற்படுவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் முன்னேற்றமடைந்துள்ளோம். இது மிகவும் பாராட்டுதலுக்குரிய சூழ்நிலையாகும்.
தொற்று நோய்கள் மற்றும் பால்வினை நோய்களைத் தடுப்பதற்கு மனித உரிமைகள் மீறப்படக் கூடாது என உள்நாட்டிலும் உலக அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த நோய்களைத் தடுப்பதற்கு, சமூகம் புரிந்துணர்வுடன் நல்ல உரையாடல் மூலம் செயல்படுவது முக்கியமாகும். இந்த நோய்களைத் தடுப்பதிலும், நோயாளிகளைக் கவனிப்பதிலும் சுகாதார சேவைகள் மட்டுமல்ல, மனித நேயமும் பங்களிக்க முடியும் என்றார்.