இலங்கை துறைமுக அதிகார சபையின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
All Stories
அரச சேவையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் ஓய்வூதிய உரிமையை பெற்றுக்கொடுக்க போராட ஒன்றிணையுமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தின் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சின் 6ம் மாடியில் இருக்கும் சில சேவைப் பிரிவுகள் மற்றும் பட்டதாரி பயிலுநர் பிரிவு என்பன சில தினங்களுக்கு மூடப்படவுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபை அமைச்சு அறிவித்துள்ளது.
கொவிட் 19 தடுப்பூசி கிடைத்தவுடன் அதனை பொது மக்களுக்கு செலுத்துவதனூடாக கொவிட் அபாயம் குறையும் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சுகாதார அதிகாரிகள் கருத்து வௌியிடுவதானது மக்கள் மத்தியில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என்று இலங்கை மருத்து ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை துறைமுக அதிகார சபையின் முழுமையான முகாமைத்துவத்தின்கீழ் கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி, துறைமுக தொழிற்சங்கங்கள் நேற்று (29) முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
நேற்று மதியம் துறைமுகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர்இ அவர்கள் தங்களது தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சுமார் 10,000 துறைமுக ஊழியரகள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
குவைத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட விலை கூடிய 62 பறவைகளில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பாது இரகசியமாக விற்பனை செய்யப்பட்ட 14 பறவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான உடன்படிக்கை குறித்த யோசனை, அடுத்தவாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் கையாளுகை நடவடிக்கையில், 49 சதவீத உரிமத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டுள்ளவாறு இன்றைய தினம் (29) முதல் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்கள செயற்பாடுகளில் மூன்றாம் தரப்பினர் தலையீடு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சுங்க தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய முதலாவது நாளில், 5,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொவிஷீல்ட் கொவிட் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்கு வழங்கப்பட்டன.
இந்த நிலையில், இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886 பேருக்கும்
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கும்
கொழும்பு தெற்கு போதனா வைத்தியாலையில் 781 பேருக்கும்
நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும்
பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கும்
பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 382 பேருக்கும்
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 190 பேருக்கும்
முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 108 பேருக்கும்
ஐ.டி.எச். வைத்தியசாலையில் 80 பேருக்கும்
வெலிசறை கடற்படை முகாமில் 56 பேருக்கும்
கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், இதுவரை ஏற்றப்பட்ட கொரோனா தடுப்பூசிகளால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
ஐ.டி.எச் வைத்தியசாலையில் முதலாவது தடுப்பூசி வழங்கல் இடம்பெற்றது. சுகாதாரத்துறையில் முதலாவதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேநேரம், இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினர் மூன்று பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மேல் மாகாணத்தில் 71 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸாரும் சுகாதாரத்துறையினரும் இணைந்து நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 830 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 759 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளை பின்றபற்றாத 71 நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெப்ரவரி 01 ஆம் திகதி நியமனம் செய்யப்படும் பட்டதாரிகளும் மற்றும் நியமனங்களை எதிர்பார்த்து மீண்டும் முறையிட்டவர்களும் அறிந்து கொள்ளும் நிமித்தம் பின்வரும் தகவல்கள் வழங்கப்படுகின்றன.