வடக்கு மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரிய இட மாற்றத்தில், எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படாமல் அவர்களின் இவ்வருடத்திற்கான இட மாற்றம் நிராகரிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
All Stories
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தங்களது யோசனைகளை முன்வைக்க துறைமுக தொழிற்சங்கங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை 3-1 இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரங்களை கல்வியமைச்சு வௌியிட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வடமாகாணத்திற்கு நியமனம்பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட வலய கல்வி அலுவலகத்தில் திங்கட்கிழமை நியமன கடிதத்தை பெற்று பாடசாலைக்கு சென்று கடமையேற்கலாம் என வட மாகாண கல்வி அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள் மற்றும் மாகாண பொதுசேவைகளுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் 20,000 கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் தாதியர் பணிக்குழாமை நேர அடிப்படையில் கட்டம் கட்டமாக (Shift) சேவைக்கு அழைக்குமாறு சுகாதார செயலாளர் அறிவித்துள்ள நிலையில், சில வைத்தியசாலைகளின் பிரதானிகள் அனைத்து தாதிய பணிக்குழாமினரையும் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வைத்தியசாலைகளின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (15) முற்பகல் தொழிற்சங்க நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவுள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று (17) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தது.
அலுவலக கடமைகளுக்கு செல்வதற்காக இன்று (15) முதல் நடைமுறைக்கு வரும்" சிட்டி பஸ்" போக்குவரத்தில் கட்டணம் பொதுப் போக்குவரத்து கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தரணிகள் 150 பேர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து சேவையாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதியமைச்சரிடம் கோரியுள்ளது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகமுள்ள பிரதேசங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை முற்றாக ஒழிப்பதற்கு நாட்டை முடக்கினால் மாத்திரமே சாத்தியமாகும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள 4960 பட்டதாரிகளை கஷ்டப்பிரதேச கல்வி, சமூக மற்றும் சமய அபிவிருத்திக்கு பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.