துறைமுக அதிகார சபை சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதிவிசேட வர்த்தமானி
இலங்கை துறைமுக அதிகார சபையின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் பி.பிஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இன்று (30) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் கைவிட்டு, இலங்கை துறைமுக அதிகார சபையின் முழுமையான முகாமைத்துவத்தின்கீழ் முனையத்தை கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுகோரி, துறைமுக தொழிற்சங்கங்கள், நேற்று முதல் ஆரம்பித்த சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினமும் தொடர்ந்தது.
இந்த நிலையில், இலங்கை துறைமுக அதிகார சபையின் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.