நாளை (28)ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரை மேல் மாகாணத்தை விட்டு வௌி மாகாணங்களுக்கு செல்வோருக்கு ரெபிட் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
All Stories
தேசிய மொழிகள் ஆணைக்குழுவில் நூற்றுக்கு 50 வீதமான மொழிபெயர்ப்பாளர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி டி. கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமைச்சரவை தீர்மானம் வருமாறு,
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளக் கொடுப்பனவை அதிகரித்தல்
'2019-2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தின்' ஏற்பாடுகளுக்கமைய 50/- ரூபா நிலையான விலைக் கொடுப்பனவு உள்ளிட்ட 750/- ரூபா நாளாந்த சம்பளமாகவும் உற்பத்தித்திறன் மற்றும் நியம கிலோகிராம் அளவு அதிகரிக்குமாயின் 'Over Kilo Rate' எனும் பெயரில் மேலுமொரு கொடுப்பனவுடன் சேர்த்து தோட்டத்தொழிலாளர்கள் தற்போது சம்பளமாகப் பெற்று வருகின்றனர்.
2020 நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்தச் சம்பளமாக 1000/- ரூபா வழங்குவதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக '2019 – 2021 தோட்ட தொழிலாளர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில்' கையொப்பமிட்டுள்ள தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டாலும், குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினரான பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை முதலாளிமார் சம்மேளனம் நாளாந்த சம்பளத்தை 920/- ரூபா வரை அதிகரிப்பதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமான வகையில் சம்பளக் கட்டுப்பாட்டு சபை மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000ஃ- ரூபா வரைக்கும் அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேல் மாகாணத்திற்கு வெளியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்களை கடமைக்கு சமுகமளிக்குமாறு மேல்மாகாணத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்கள் கட்டாயப்படுத்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்த ஆசிரியர்களைத் தவிர, ஏனையவர்கள் பாடசாலைகளுக்கு கட்டாயப்படுத்தி அழைக்கப்பட்டால், அது குறித்து தமக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கேள்வி - மேல் மாகாணத்தில் சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக இன்றைய தினம் பாடசாலைகள் மீள திறக்கப்படுகின்றன. கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் மீள திறக்கப்படுவது தொடர்பான இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில் - கடந்த ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதியின் பின்னர் மேல் மாகாணத்தில் இன்றைய தினம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. 907 பாடசாலைகளில் சுமார் 79,000 மாணவர்கள் இன்றைய தினம் பாடசாலைக்கு சமுகமளிக்கின்றனர். கொவிட்-19 தொற்று நிலை மேல் மாகாணத்தில் அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படுகின்றன.
பாடசாலை மாணவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு பாடசாலை மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம். ஆனால் மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒரு முகக்கவசத்தையேனும் அரசாங்கம் வழங்கவில்லை. மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்காகவேனும் ஒரு முகக்கவசத்தையாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கூறியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதேநேரம் கைகளை கழுவுவதற்கும் சமூக இடைவெளியை பேணுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் கிருமி தொற்றி நீக்கும் செனிடைஸர்களை வழங்குவதற்குகூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை பாடசாலையில் உள்ள நிதியில்தான் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கேள்வி - இன்றைய தினம் மேல் மாகாணத்தில் பாடசாலைகளுக்கு கடமைக்கு சமுகமளிக்கும் ஆசிரியர்களின் நிலை எவ்வாறு உள்ளது?
பதில் - மேல் மாகாணத்திற்கு வெளியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிகளவான ஆசிரியர்கள்தான் மேல்மாகாணத்தில் கடமையாற்றுகின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள்தான் மேல் மாகாணத்தில் அதிகளவில் கடமையாற்றுகின்றனர்.
கல்வி அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையின் பிரகாரம் 11 ஆம் தரத்திற்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மாத்திரமே கடமைக்குவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு செல்ல முடியாது என்றும், வெளிப்பிரதேசங்களில் இருந்து மேல்மாகாணத்திற்கு வர முடியாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சில பாடசாலைகளின் அதிபர்கள் ஏனைய பிரதேசங்களிலிருந்து ஆசிரியர்களை சேவைக்கு அழைப்பதற்கு வற்புறுத்துவதாக எங்களுக்கு தெரிய வருகின்றது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கொவிட்-19 தொற்று இருக்கின்ற சந்தர்ப்பத்தில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதனை மீறி செயற்படுகின்றபோது, அதற்கு அவர்களே பொறுப்பு கூற வேண்டும்.
கடந்த 15ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் குறித்;த ஆசிரியர்களைத் தவிர, ஏனையவர்கள் பாடசாலைக்கு சமுகமளிக்க தேவையில்லை என ஆசிரியர்களிடம் நாங்கள் கூறுகின்றோம். அவ்வாறு பிரச்சினை ஏற்படுமாயின் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு அறிவிக்குமாறு ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பட்டதாரி பயிலுநர்களாக சேவையில் இணைத்துக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை பெப்ரவரி முதலாம் திகதி நடத்தப்படவுள்ள நேர்முகத்தேர்வில் மீண்டும் குறைப்பதற்குள்ள வாய்ப்புகளை நிறுத்துமாறு பொது சேவைகள் மாகாசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அபிவருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் 23.11.2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 ஆகிய தினங்களில் பொது சேவைகள் அமைச்சினால் வௌியிடப்பட்ட பெயர் விபரங்களில் குறிப்பிடப்பட்ட பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
21.01.21ம் திகதி உங்கள் கையெழுத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் மாதிரி சத்திய கடிதத்தில்பகுதியில் 4ம் இலக்கத்தில் தொழிலின்மை தொடர்பில் கோரப்பட்டுள்ள விடயம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதுடன் பட்டப்படிப்புக்கு நியாயமான தொழிலை எதிர்பார்த்துள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலுக்கான விண்ணப்பமொன்றை அனுப்பும் போதே செய்யும் பணியில் இருந்து விலகி விண்ணப்பங்களை அனுப்புவது என்பது பொதுவாக யாரும் செய்வதில்லை என்பதை பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பமொன்றை அல்லது மேற்முறையீட்டை அனுப்பி வைத்தவுடன் தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் அடிப்படை உரிமைகளின் கீழ் அல்லது வேறு விதிமுறைகளில் குறிப்பிடவில்லை.
23.11.2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 ஆகிய தினங்களில் வௌியிடப்பட்ட பெயர் விபரங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் பொது சேவைகள் அமைச்சில் 16.08.2020 தெரிவு செய்யப்பட்டதற்கமைவாக PF/JOB, JOB, NO DOCUMENTS, NO DS, Pending, Applied in 2 district ஆகிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளுக்குட்பட்ட 09.09.2020 தொடக்கம் 31.12.2020 வரையான மற்றும் இதுவரையும் தகுதி பெறாதவர்கள் 17.01.2021 வரை மேன்முறையீடு செய்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட பிரிவுகளுக்குரிய பட்டதாரிகளின் கோரிக்கை மற்றும் மேன்முறையீடுகளை கவனத்திற்கொண்டு தெரிவு செய்துக்கொள்வது தொடர்பில் நாம் அமைச்சர் உட்பட அமைச்சின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன் 01.02.2021 அன்று பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சத்திய கடிதத்திற்கு அமைய 15.09.2020 அன்று பணிபுரியாத
அரசாங்கம் ஒருபுறம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதாக அறிவித்து மறுபுறம் அதனை இல்லாமல் செய்ய முயற்சிப்பதற்கு எதிராக பட்டப்படிப்புடன் தொழில் பெறும் வயதெல்லையில் இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் அவர்களுடைய பட்டப்படிப்புக்கு ஏற்ற தொழிலில் ஈடுபடக்கூடிய மனித உரிமைக்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பர் என்பதையும் குறிப்பிடுகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரசவ விடுமுறை குறைப்புக்கு எதிராக தொழிலாளர் சங்கம் மகளிர் அமைப்பு மற்றும் ஏனைய அமைப்புகள் இணைந்து கையொப்பமிட்டு ஒன்றிணைக்கப்பட்ட வாக்குமூலத்தை இன்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாக ஒன்றினைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைத்தல் கட்டம் 11 இற்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி உரிய பிரதேச செயலகங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த அடிப்படை சம்பளத்தை 860 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக
இணையம் ஊடான நிதியியல் மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பு பெறும் வழிமுறைகள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, இன்று முதல் மீளத் திறக்கப்படுகின்றன.
இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் அட்டன் மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள் இன்று (26) போராட்டத்தில் ஈடுபட்டன.