பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைப்பதில் கேள்விக்குறி?

பட்டதாரி பயிலுநர்களை சேவையில் இணைப்பதில் கேள்விக்குறி?

பட்டதாரி பயிலுநர்களாக சேவையில் இணைத்துக்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளை பெப்ரவரி முதலாம் திகதி நடத்தப்படவுள்ள நேர்முகத்தேர்வில் மீண்டும் குறைப்பதற்குள்ள வாய்ப்புகளை நிறுத்துமாறு பொது சேவைகள் மாகாசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

அபிவருத்தி அதிகாரிகள் சேவை சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் 23.11.2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 ஆகிய தினங்களில் பொது சேவைகள் அமைச்சினால் வௌியிடப்பட்ட பெயர் விபரங்களில் குறிப்பிடப்பட்ட பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
21.01.21ம் திகதி உங்கள் கையெழுத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் மாதிரி சத்திய கடிதத்தில்பகுதியில் 4ம் இலக்கத்தில் தொழிலின்மை தொடர்பில் கோரப்பட்டுள்ள விடயம் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதுடன் பட்டப்படிப்புக்கு நியாயமான தொழிலை எதிர்பார்த்துள்ள ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலுக்கான விண்ணப்பமொன்றை அனுப்பும் போதே செய்யும் பணியில் இருந்து விலகி விண்ணப்பங்களை அனுப்புவது என்பது பொதுவாக யாரும் செய்வதில்லை என்பதை பொறுப்புக்கூறவேண்டிய அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பமொன்றை அல்லது மேற்முறையீட்டை அனுப்பி வைத்தவுடன் தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்று அரசாங்கம் அடிப்படை உரிமைகளின் கீழ் அல்லது வேறு விதிமுறைகளில் குறிப்பிடவில்லை.

23.11.2020, 11.12.2020 மற்றும் 05.01.2021 ஆகிய தினங்களில் வௌியிடப்பட்ட பெயர் விபரங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட அனைவருக்கும் பொது சேவைகள் அமைச்சில் 16.08.2020 தெரிவு செய்யப்பட்டதற்கமைவாக PF/JOB, JOB, NO DOCUMENTS, NO DS, Pending, Applied in 2 district ஆகிய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளுக்குட்பட்ட 09.09.2020 தொடக்கம் 31.12.2020 வரையான மற்றும் இதுவரையும் தகுதி பெறாதவர்கள் 17.01.2021 வரை மேன்முறையீடு செய்துள்ளனர்.

மேலே குறிப்பிட்ட பிரிவுகளுக்குரிய பட்டதாரிகளின் கோரிக்கை மற்றும் மேன்முறையீடுகளை கவனத்திற்கொண்டு தெரிவு செய்துக்கொள்வது தொடர்பில் நாம் அமைச்சர் உட்பட அமைச்சின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதுடன் 01.02.2021 அன்று பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சத்திய கடிதத்திற்கு அமைய 15.09.2020 அன்று பணிபுரியாத

அரசாங்கம் ஒருபுறம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்குவதாக அறிவித்து மறுபுறம் அதனை இல்லாமல் செய்ய முயற்சிப்பதற்கு எதிராக பட்டப்படிப்புடன் தொழில் பெறும் வயதெல்லையில் இருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் அவர்களுடைய பட்டப்படிப்புக்கு ஏற்ற தொழிலில் ஈடுபடக்கூடிய மனித உரிமைக்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பர் என்பதையும் குறிப்பிடுகிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image