தடுப்பூசி வழங்கத் தொடங்கினாலும் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படவேண்டும்

தடுப்பூசி வழங்கத் தொடங்கினாலும் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படவேண்டும்

கொவிட் 19 தடுப்பூசி கிடைத்தவுடன் அதனை பொது மக்களுக்கு செலுத்துவதனூடாக கொவிட் அபாயம் குறையும் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் சுகாதார அதிகாரிகள் கருத்து வௌியிடுவதானது மக்கள் மத்தியில் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவதை குறைப்பதற்கு ஏதுவாக அமையும் என்று இலங்கை மருத்து ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

தடுப்பு மருந்துகள் நாட்டுக்கு வந்தடைந்தவுடன் உடனடியாக மக்களுக்கு செலுத்துவது என்பது சாத்தியமாகாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து வௌியிட்டுள்ள அவர், தடுப்பு மருந்துகள் நாட்டை வந்தடைந்தவுடன் அதனை நாடு முழுவதும விநியோகிக்க வேண்டும். தடுப்பூசிகளை சேமித்து பயிற்சி பெற்ற நிபுணர்களினூாக அதனை தடுப்பூசிகளை செலுத்த நியமிக்க வேண்டும். தடுப்பூசிகளை செலுத்திய பின்னர் உடலில் ஏற்படும் நோயெதிர்ப்பு திறன் குறித்து ஆய்வு செய்ய ​வேண்டும். பக்கவிளைவுகள் ஏற்படுமாயின் அதனை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். இவற்றை ஒரே இரவில் செய்வதென்பது சாத்தியப்படாது. உடனடியாக நடைமுறைப்படுத்தாற்போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதானது மக்கள் கவனயீனமாக நடந்துகொள்ள வழிவகுக்கக்கூடும்.

300,000 பேருக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் COVID-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது. தடுப்பூசி வழங்கலை பூர்த்தி செய்வதற்கு சுமார் இரண்டு வருடங்கள் வரை தேவைப்படலாம். மக்கள் மத்தியில் தவறான நம்பிக்கைகளை கொண்டு செல்வதானது 'தம்மிக்க பாணியினால்' ஏற்படுத்தப்பட்ட பாதிப்பை போன்று ஏற்படுத்தக்கூடும். எங்களுக்கு 600,000 தடுப்பூசி மருந்துகள் கிடைக்கின்றன என்று வைத்துக் கொள்வோம். நாங்கள் 300,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட முடியும். முதல் தொகுதிக்கு ஏதேனும் பக்க விளைவுகள் இருக்கிறதா, நோயெதிர்ப்புத் திறனை உருவாக்க எத்தனை நாட்கள் ஆகும் என்பதைப் பார்க்க வேண்டும். வைரஸின் பல்வேறு வகைகளுக்கு ஒரு தடுப்பூசி எவ்வாறு வினைபுரியக்கூடும்? இங்கு எத்தனை மாத்திரைகள் உள்ளன என்று கூட எங்களுக்குத் தெரியாது. ”

புதிய திரிபடைந்த கொரோனா வைரஸ் மரபணு வரிசையை அடையாளங்காணக்கூடிய வசதியை கூட அரசாங்கம் விரிவுபடுத்தவில்லை. ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தில் மட்டுமே மரபணு வரிசைமுறை இயந்திரம் உள்ளது. கொரோனா வைரஸின் புதிய விகாரங்களை அடையாளம் காணும் சுகாதாரத் துறையின் திறனை கூட அரசாங்கம் விரிவாக்கவில்லை உக்ரேனில் குறைந்தது ஐந்து திரிபடைந்த கொரோனா வைரஸ்கள் உள்ளன. இலங்கை உக்ரைனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்தது. "எங்களுக்குத் தெரியாமல் ஒரு புதிய திரிபுபடைந்த வைரஸ் இருக்கக்கூடும், ஏனென்றால் நாங்கள் போதுமான மரபணு வரிசைப்படுத்தலை செய்யவில்லை.

“புதிய மாறுபாடுகளை அடையாளம் காண, பி.சி.ஆர் சோதனை மூலம் கண்டறியப்பட்ட வைரஸ்களின் மரபணுக்களை நாம் வரிசைப்படுத்த வேண்டும். பி.சி.ஆர் சோதனை மூலம் ஒருவர் புதிய திரிபடைந்த வைரஸை கொண்டுள்ளாரான அடையாளம் காண எங்களுக்கு பல மரபணு வரிசைப்படுத்தல் இயந்திரங்கள் தேவைப்படுகிறது. ஆனால் சுகாதார அமைச்சு எந்தவொரு ஆய்வுகூடங்களுக்கும் மரபணு வரிசைப்படுத்தல் இயந்திரத்தை வழங்கவில்லை. ”

சுகாதார முன்னணி ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கலில் முன்னுரிமைப்படுத்தும் போது நாட்டின் ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர் வரை அனைவரும் உள்ளடக்கப்படுகின்றனர். நோயாளிகளிடமிருந்து முதலில் வைரஸ் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளவர்கள் நிர்வாகத்தில் உள்ளவர்கள் அல்ல. நேரடியாக, உடனடியாக நோயாளிகளுடன் தொடர்புகொள்பவர்கள் வைத்தியசாலை சிற்றூழியர்கள்தான். அவர்களும் தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமைப்படுத்துவோர் வரிசையில் உள்ளடக்கப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.

எந்தவொரு தடுப்பூசியும் 100 வீதம் பயனுள்ளது என்று கூறமுடியாது. சிலருக்கு பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இது தொடர்பில் மக்களுக்கு தௌிவுபடுத்தப்படவேண்டும். தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முதல் அவர்களுடைய ஒப்புதல்கள் பெறப்படவேண்டும். தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் மருத்துவ ஆய்வுகூட நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image