71 நிறுவனங்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
மேல் மாகாணத்தில் 71 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய செயற்படுவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸாரும் சுகாதாரத்துறையினரும் இணைந்து நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், 830 அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நேற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 759 நிறுவனங்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனிமைப்படுத்தல் சுகாதார விதிமுறைகளை பின்றபற்றாத 71 நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.