கிழக்கு முனைய உடன்படிக்கைக்கான யோசனை அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படமாட்டது
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பான உடன்படிக்கை குறித்த யோசனை, அடுத்தவாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துறைமுக தொழிற்சங்கங்கள் போராட்டங்களை மேற்கொண்டுள்ளன.
இந்த உடன்டிக்கை குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படுமாக இருந்தால், துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமம் 51 சதவீதம் அன்றி 100 சதவீதம் துறைமுக அதிகாரசபைக்கு இருக்க வேண்டும் என்று துறைமுக தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருந்தன.
எவ்வாறிருப்பினும், முன்னதாக இந்த யோசனை அடுத்தவாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்;று அவரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது சம்மந்தமான யோசனை அடுத்தவாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்படாது என்று மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.