முதல் நாளில் 5,286 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன

முதல் நாளில் 5,286 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இன்றைய முதலாவது நாளில், 5,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொவிஷீல்ட் கொவிட் தடுப்பூசிகள் நேற்று இலங்கைக்கு வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 1886 பேருக்கும்
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் 803 பேருக்கும்
கொழும்பு தெற்கு போதனா வைத்தியாலையில் 781 பேருக்கும்
நாரஹேன்பிட்டிய இராணுவ வைத்தியசாலையில் 600 பேருக்கும்
பனாகொட இராணுவ முகாமில் 400 பேருக்கும்
பொரளை சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் 382 பேருக்கும்
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 190 பேருக்கும்
முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் 108 பேருக்கும்
ஐ.டி.எச். வைத்தியசாலையில் 80 பேருக்கும்
வெலிசறை கடற்படை முகாமில் 56 பேருக்கும்

கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், இதுவரை ஏற்றப்பட்ட கொரோனா தடுப்பூசிகளால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் முதலாவது தடுப்பூசி வழங்கல் இடம்பெற்றது. சுகாதாரத்துறையில் முதலாவதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதேநேரம், இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தினர் மூன்று பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

 

Vaccine_01.jpg

Vaccine_03.jpg

Vaccine_02.jpg

Vaccine_04.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image