நேற்று 21,329 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பு மருந்து

நேற்று 21,329 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பு மருந்து

 ​நாட்டில் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் நேற்று (31) 21,329 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனக்கா கொவிட் 19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக நாட்டில் 59, 154 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்தியா Oxford-AstraZeneca - COVISHIELD தடுப்பு மருந்தை இலங்கைக்கு கையளித்ததையடுத்து தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை கடந்த 29ம திகதி நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.e Ministry of Health says that 21,329 frontline healthcare workers were vaccinated with the Oxford-AstraZeneca COVID-19 vaccine yesterday (31), at selected locations across the country.

முன்னுரிமை அடிப்படையில் 150,000 சுகாதாரத்துறை ஊழியர்கள், 120,000 முப்படையினர் மற்றும் பாதுகாப்பத்தரப்பினர் போன்ற கொரோனா தடுப்புப் பணிகளில் முன்னிலை வகிக்கும் ஊழியர்கள் தடுப்பு மருந்து பெற எதிர்பார்த்துள்ளனர். இதனையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட தொற்றாநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image