C190 குறித்த பாராளுமன்றில் முன்வைக்க ஏற்பாடு

C190 குறித்த பாராளுமன்றில் முன்வைக்க ஏற்பாடு

பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு முற்றுபுள்ளி வைபதற்கான உலக தொழிலாளர் தாபனத்தின் C190 பிரகடனத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தன் முக்கியத்துவம் குறித்த பாராளுமன்றில் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் எம்பி ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்ககளள் இணைந்து கடந்த 27ம் நடத்தப்பட்ட இணைய சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்

இக்கலந்துரையாடலில் NUSS, CMU, JSS, GNO, NUW, டாபிந்து மற்றும் வர்த்தக உற்பத்தி சேவை முன்னேற்ற ஊழியர்கள் சங்கம் ஆகிவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் இக்கலந்துரையாடலில் மேலும் சுமார் 35 தொழிற்சங்க அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஒற்றுமையே பலம் முன்னணி சார்பில் ரோஹினி கவிரத்தன, பாராளுமன்ற பிரதிச் செயலாளர் சமந்தி விக்கிரமசிங்க, சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் ஒற்றுமையே பலம் முன்னணியிலிருந்து மாயந்த திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வை அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அங்கத்துவ பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் கொடுமைகள் தொடர்பில் சுருக்கமாக விளக்கப்பட்டது. மேலும் C 190 பிரகடனத்தை நாட்டில் நடைமுறைப்படுத்துவது எந்தளவு முக்கியமானது என்பது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலிக்கான வசதிபடுத்தல்களை சட்டத்தரணி ஷாமலி ரணராஜாவினால் மேற்கொள்ளப்பட்டதுடன் NUSS ஆலோசகர் பபா தேஷப்பிரிய பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.

இதன்போது பல தொழிற்சங்க உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்ததுடன் சமூகத்திலும் தொழில் இடங்களிலும் பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்த அனுபவங்கயைும் பகிர்ந்துகொண்டிருந்தனர். இதனூடாக நாட்டில் C190யை நிறைவேற்றுவது எந்தளவு முக்கியமானது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தொழிற்சங்கங்கள் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகயைும் முன்வைத்ததையடுத்து இவ்விடயங்களை கவனத்திற்கொண்ட ரோஹினி கவிரத்ன எம்பி பாராளுமன்ற பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடி பாராளுன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கி எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றில் முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த பிரகடனம் தொடர்பில் சாதகமான பதிலை பாராளுமன்றில் விரைவில் எதிர்பார்க்க முடியும் என்று தொழிற்சங்ககள் எமது இணைதளத்திற்கு கருத்து தெரிவித்திருந்தன.

 

web meeting 3

  web meeting2

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image