துறைமுக தொழிற்சங்கங்களுக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை

துறைமுக தொழிற்சங்கங்களுக்கும், பிரதமருக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, துறைமுக தொழிற்சங்கங்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான விசேட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில், கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளித்துள்ள வர்த்தக கைத்தொழில் மற்றும் சேவை மேம்பாட்டு ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஷ்யாமல் சுமணரத்ன, இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது சங்கத்தின் 21 உறுப்பினர்கள் கலந்துக்கொள்வார்கள் என தெரிவித்தார்.

இன்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானம் ஏற்படும் பட்சத்தில் தாம் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image