'பட்டதாரிகளுடன் உரையாடல்' நிகழ்ச்சிக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

'பட்டதாரிகளுடன் உரையாடல்' நிகழ்ச்சிக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு

'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியைப் போன்று, 'பட்டதாரிகளுடன் உரையாடல்' நிகழ்ச்சி ஒன்றை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்;கை விடுத்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

கிராமத்துடன் உரையாடல் என்ற நிகழ்ச்சியை ஜனாதிபதி நடத்துகிறார். அவ்வாறெனில் பட்டதாரிகளுடன் உரையாடல் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு வாருங்கள் என நாங்கள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கின்றோம். பட்டதாரிகளின் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு கிராமத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் கொழும்பில் ஒரு மேடை அமைத்து தருகின்றோம். அவர் கூறினால் நாங்கள் பதினாறு பல்கலைக்கழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 16 பேர் வருகின்றோம். பட்டதாரிகளுடன் உரையாடல் என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள். இந்த விடயத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்றும், எங்கள் பக்கத்தில் வழங்கக்கூடிய யோசனைகளையும் நாங்கள் இதன்போது வழங்குகின்றோம். ஆனால் அவ்வாறு நடப்பதில்லையே? நாங்கள் கூட்டத்தை நடத்தும்போது அவர்கள் பொலிஸாரை அனுப்பி அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.

பிரச்சினைகள் ஏற்படும்போது அதனை அடக்கி பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியாது. அதனூடாக அந்த பிரச்சினை மேலும் தீவிரமடையும். எனவே, அதற்கான ஒரு பிரவேசத்தை அவர் எடுப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

தயவுசெய்து இப்பிரச்சினையை முடிவு கொண்டுவர, இந்தப் பிரச்சினைக்கான காரணத்தை அறிய அறியுங்கள். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக வெளிப்படையான ஒரு அழைப்பை நாங்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விடுகின்றோம். பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் 16 பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறியுள்ள பிரதிநிதிகள் சார்பில் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்.

பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் நாங்கள் உரிய விடயங்களை முன்வைத்து எழுத்து மூலமாகவும் சமர்ப்பிக்கின்றோம். அதன்பின்னர் நாங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பிப்போம். எனவே கிராமத்துடன் உரையாடல் போன்று பட்டதாரிகளுடன் உரையாடல் நிகழ்ச்சிக்கு வருமாறும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். - என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image