இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2021 - 2022 ஆண்டுக்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26வது தலைவராக சாலிய பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் தலைமைப் பதவிக்கு சட்டத்தரணி குவேர டி சொய்சாவுடன் போட்டியிட்ட நிலையில் 5162 வாக்குகளை பெற்று சாலிய பீரிஸ் தலைவர் பதவிக்கு தெரிவாகியுள்ளார். சட்டத்தரணி குவேர டி சொய்சா பெற்றுக்கொண்ட வாக்குகள் 2807 ஆகும்.

சங்கத்தின் செயலாளர் பதவிக்கு சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Author’s Posts