தொழிற்சங்க நடவடிக்கைக்கும் எமக்கும் தொடர்பில்லை - ரயில்நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

தொழிற்சங்க நடவடிக்கைக்கும் எமக்கும் தொடர்பில்லை - ரயில்நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

ரயில்வே ஊழியர்கள் பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வௌியாகியுள்ள செய்தி ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் எவ்விதத்திலும் தொடர்புபட்டிருக்கவிலை என்று அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் உத்தியோகப்பூர்வ முகநூல் பக்கத்தில் இத்தகவல் வௌியிடப்பட்டுள்ளது.

ரயில்போக்குவரத்தை நிறுத்த தீர்மானிக்கவில்லை. அதேநேரம் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு எவ்விதத்திலும் இடையூறு விளைவிக்கவும் இல்லை என அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்திருந்த நிலையில் கலந்துரையாடலுக்கு விடய பொறுப்பு அமைச்சர் இணக்கம் வௌியிட்டதையடுத்து அத்தீர்மானம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts