கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்குமா?

கொரோனா தடுப்பு மருந்து பயனளிக்குமா?

தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொவிட் 19 திரிபு உட்பட கொரோனா தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள தடுப்பு மருந்தை பொது மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று இலங்கை மருத்தவர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் ஏற்கனவே பரவிய கொரோனா வைரஸ் போன்ற மற்றொரு திரிபும் பரவி வருகிறது. அது வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது. அதிகமாக மக்கள் தொற்றுக்குள்ளாகினால் பல்வேறு விதமான நோய்க்குறிகள் உருவாவதுடன் சிக்கல்களும் மரணங்களும் அதிகரிக்கக்கூடும் என்றும் இலங்கை மருத்துவர் சங்கத்தின் தலைவர் டொக்டர் பத்ம குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் (முகக்கவசங்களை அணிதல், சமூக இடைவௌியை பேணுதல், கைகழுவதல்) போன்றவற்றை தொடர்ந்தும் கடைப்பிடிப்பது புதிய கொரோனா திரிபிலிருந்து எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்றும் டொக்டர் பத்ம குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படாமையினாலேயே புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுகிறது.

புதிய திரிபுடன் கூடிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க தற்போதிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பு மருந்து மட்டுமே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image