பேச்சுவார்த்தை தோல்வி: சுகாதார பணியாளர்கள் அரசாங்கத்திற்கு 14 நாட்கள் காலக்கெடு

பேச்சுவார்த்தை தோல்வி: சுகாதார பணியாளர்கள் அரசாங்கத்திற்கு 14 நாட்கள் காலக்கெடு

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 14 நாட்களுக்கு பின்னர் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடுத்து சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளதாக அதன் செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் குறிப்பிட்டார்.

கொடுப்பனவுகள் மற்றும் சேவையில் நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் இன்று முற்பகல் தேசிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து சுகாதார அமைச்சு வரையில் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தது.

இதன் காரணமாக கொழும்பு நகரமண்டப பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்தில் உள்நுழைய முயற்சித்தமையை அடுத்து பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு சுகாதார அமைச்சின் தரப்பினருடன் கலந்துரையாடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு மற்றும் எழுத்துமூல ஆவணங்கள் எவையும் வழங்கப்படாமை காரணமாக கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடத்து தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுமென ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர் சங்கத்தின் செயலாளர் தெம்பிட்டியே சுகதானந்த தேரர் தெரிவித்தார்.

152056606_756480041639759_5871822555584691273_o.jpg

151391466_756480108306419_882717799728612773_o.jpg

152988053_756480194973077_2675669839080917360_o.jpg

151628694_756502784970818_7342227084138118849_o.jpg

153783692_756502751637488_2102530412967962574_o.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image