பயிலுனர் பட்டதாரிகளை கொவிட்-19 பணிகளில் ஈடுபடுத்துவதை நிறுத்தவும்
பாடசாலைகளுக்காக ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை கொவிட்-19 பணிகளுக்காக நியாயமற்ற முறையில் ஈடுபடுத்தும் வேலை திட்டத்தை நிறுத்துமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரியஆராய்ச்சியினால், பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2020ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி பயிலுனர் பயிற்சியின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை அடிப்படையற்ற முறையில், விடயங்களை ஆராயாமல் நியாயமற்ற முறையில் பல மாவட்டங்களில், பிரதேச செயலக காரியங்களில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஈடுபடுத்துவது நீதியானது மற்றும் உரிய நடைமுறை அல்ல என நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
01. கொழும்பு மாவட்ட செயலாளரின் ஆலோசனையின்பேரில் கோட்டே பிரதேச செயலகத்திலும், மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள பிரதேச செயலக காரியத்திலும் இவ்வாறான நிலைமை பதிவாகியுள்ளது.
02. 1. பாடசாலைகளுக்காக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் முறைப்படுத்தப்பட்ட முறைமைக்கு வெவ்வேறு பாடவிதானங்களை கற்பிப்பதாக தகவல் பதிவாகியுள்ளது.
2. பாடங்கள் திட்டமிடப்பட்டு வலயக் கல்விப் பணிமனைக்கு அனுப்புதல்.
03. மே மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகளில் பங்கேற்பதற்காக எவ்வித சுகாதார பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படாது ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
04. சில பயிலுனர் பட்டதாரிகள் மாலை 6 மணி வரையில் 7 நாட்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுதல்.
05. நடமாட்டக் கட்டுப்பாடு கடுமையாக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இடம்பெறாத சூழ்நிலையில், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் கூட கிடைக்கப்பெறாமல், சேவை அடையாள அட்டையும் கிடைக்கப்பெறாத பயிலுனர் பட்டதாரிகளை சேவைக்கு அழைப்பதும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாகும்.
06. தற்போதைய போக்குவரத்து மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் வருகைத்தர முடியாத பயிலுநர் பட்டதாரிகளின் மாதாந்த கொடுப்பனவை குறைப்பதாக அச்சுறுத்தி பலவந்தமாக அவர்களை சேவைக்கு அழைத்தல்.
07. பாடசாலைகளுக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் என்பதால் குறித்த தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்திற்கு அவர்களை உள்ளீர்க்காமை.
சில பிரதேச செயலாளர்கள் இவ்வாறாக பயிற்றுனர் பட்டதாரிகளை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அனுப்பி இருக்கின்றபோதிலும், அவ்வாறானவர்கள் அவசியமில்லை என சில வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைகளுக்காக ஆட்சேர்க்கப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளை, பாதுகாப்பற்ற முறையில் கொவிட்-19 பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு எழுத்துமூலம் ஆலோசனை வழங்குமாறு தங்களது சங்கம் கேட்டுக் கொள்கின்றது. - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.