அபிவிருத்தி உத்தியோகத்தர் - பயிலுனர்களுக்கு சலுகைகோரி விசேட கோரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒரு வருடத்திற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை உடைய கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு சலுகை வழங்கியமை தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ராநந்தவிற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் இன்று (09) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தற்போதைய நிலைமைக்கு மத்தியில் ஒரு வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை உடைய உத்தியோகத்தர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் அவர்களை சேவைக்கு அழைக்காதிருக்க மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சி வெளியிடுகின்றோம்.
குறித்த உத்தியோகத்தர் ஊடாக சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் நோக்கிலான இந்த தீர்மானம் சுகாதார மற்றும் விஞ்ஞானிகள் அடிப்படையிலானது என்று நாங்கள் நம்புகின்றோம்.
,தற்கமைய தற்போதைய அவதானம் மிக்க நிலைமைக்கு மத்தியில், பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவையை முன்கொண்டு செல்வதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்கீழ் ,ணைக்கப்பட்ட மாவட்ட செயலக காரியாலயத்திற்கு உட்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக காரியாலயத்திற்கு இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி / திட்டமிடல் / கட்டுப்பாடு போன்ற ஆரம்ப பிரிவுகளில் சுழற்சி முறையிலான சேவையின் அடிப்படையில் அவர்கள் பணிக்கு அழைக்கப்படுகின்றனர்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையின் மூலம் கர்ப்பிணித்தாய் உத்தியோகத்தர்களுக்கு சலுகை யோசனை வழங்கப்பட்டிருந்த போதிலும், ஒரு வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை கொண்டுள்ள உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.
இதற்கமைய பிரதேசங்களுக்கு பொறுப்பாக சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் சேவைக்கு இணைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகளை கொண்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் இந்த நிவாரணத்தை சலுகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த சலுகை வழங்கப்படும்போது, பிரதேச செயலங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு வயதிற்கும் குறைந்த வயது உடைய குழந்தைகளைக் கொண்டுள்ள பயிலுனர் பட்டதாரிகளுக்கும் இந்த சலுகையை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
- என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு
கடமையில் ஈடுபடாத கிராம சேவையாளர் தொடர்பில் விசாரணை
பயிலுனர் பட்டதாரிகளை கொவிட்-19 பணிகளில் ஈடுபடுத்துவதை நிறுத்தவும்