நுவரெலியாவில் சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

நுவரெலியாவில் சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று (9) புதன்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நான்கு மணித்தியாளயங்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் முன்பாக இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணிபகிஷ்கரிப்பில் 300 க்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.

NEN01.jpg

கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக தொழில்புரியும் சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும்.

சகல சுகாதார ஊழியர்களுக்கும் அபாய கொடுப்பனவு வழங்க வேண்டும்.

மேலதிக சேவை நேரத்திற்கான கொடுப்பனவை வழங்க வேண்டும்.

கொரோனா காலத்தில் ஏனைய அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலைகைகளை தமக்கும் வழங்க வேண்டும்.

NEN02.jpg

என பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

NEN03.jpg

 

Author’s Posts