சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

சமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்

சமூக வலைதளங்களில் உரிமையாளர் இல்லாத கணக்குகள், சமூக வலைத்தளங்களினூடாக பல்வேறு வழிகளில் நாட்டிற்கும், மக்களுக்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்கும் செயல்களை வேண்டுமென்றே உருவாக்கும் நபர்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (8) தெரிவித்தார்.

 

 இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

'சமூக வலைத்தளங்களில் வெளியாகின்ற செய்திகளை புலனாய்வு செய்வதற்காக குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தை நியமித்துள்ளதாக நேற்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். உண்மையிலேயே, சமூக ஊடகங்கள் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா' என்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், சில வாரங்களுக்கு முன்பு இதுதொடர்பாக அமைச்சரவைக்கு அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறிய அமைச்சர், இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற உலகின் பல நாடுகளிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற உண்மைகளை நேர்மறையான முறையில் முன்வைத்த ஊடகவியலாளர்கள் காரணமாக சில பிரச்சினைகள் முன்வந்தன.

ஊடகவியலாளர்களின் சரியான வழிகாட்டுதலை வேறு பரிமாணங்களுக்கு கொண்டு செல்ல முடியும். இதுபோன்ற நடந்து கொள்ளும் நபர்களால் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. பிற நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்த மக்கள் மறைமுகமாக பங்களிப்பதே இதற்குக் காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, நேர்மறையான உண்மைகளை முன்வைக்கும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image