தடுப்பூசி செலுத்திய விடயம் தொடர்பில் இரு சுகாதார அதிகாரிகளுக்கு இடமாற்றம்

தடுப்பூசி செலுத்திய விடயம் தொடர்பில் இரு சுகாதார  அதிகாரிகளுக்கு இடமாற்றம்

காலி மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவின் பிராந்திய பிரதானி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலி மாவட்டத்தில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாம் செலுத்துகையை வழங்கியமைக்காக அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த நபர்களுக்கு அவர்கள் தடுப்பூசிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுகாதார அமைச்சு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts