2022 இற்குரிய வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் விண்ணப்பம் கையளிக்கும் திகதி பயணத்தடை காலத்தினுள் அடங்குவதால் விண்ணப்பங்களை பாடசாலை அதிபரிடம் கையளிக்கலாம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2022 இற்குரிய வருடாந்த ஆசிரிய இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் விண்ணப்பம் கையளிக்கும் திகதி பயணத்தடை காலத்தினுள் அடங்குவதால் விண்ணப்பங்களை பாடசாலை அதிபரிடம் கையளிக்கலாம்.
முடியாதவிடத்து மறு திகதி நீடித்து அறிவிக்கப்படும் வரை பொறுத்திருக்கலாம்.
காரணம் பயணத்தடை என்பது நாடு முழுவதும் உள்ள நடை முறை. இதுபற்றி மத்திய, மாகாண கல்வி அமைச்சிடம் தெரியப்படுத்தியுள்ளோம். திகதி நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான மாற்றுமுறை அறிவித்தல் கிடைத்தால் உடன் உங்களுக்கு அறியத்தரப்படும்.
கட்டாய இடமாற்றம் தொடர்பாக எந்த அறிவித்தல்களும் இதுவரை மத்திய கல்வி அமைச்சால் அறிவிக்கப்படவில்லை.
இடமாற்றத்திற்கு விண்ணப்பம் வழங்குங்கள் என எவரும் உங்களை வற்புறுத்த முடியாது. அவ்வாறு வற்புறுத்தினால் எமக்கு அறியத்தாருங்கள். அத்தகைய விண்ணப்பங்களை வழங்க வேண்டாம். இடமாற்றம் உங்களுக்கு தேவை எனும் சந்தர்ப்பத்தில் மட்டும் அதனை கையளியுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.