நோர்வூட் - ஸ்டொக்ஹம் தொழிற்சாலைப் பிரிவில் குளவி கொட்டுக்கு இலக்காகி 18 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
All Stories
' உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.' - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் தலவாக்கலை தோட்ட சேவையாளர்கள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து சந்தா பணம் அறவிடப்படாத நிலையில், தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயற்பாடுகள் எப்படியாக முன்னெடுக்கப்படுகின்றது
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பு விரைவில் உருவாகிறது
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் ஜோர்ஜ் பச்சைபங்களா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் தாக்கியதில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் தலவாக்கலை கட்டுக்களை தோட்ட தொழிலாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மலையத்தில் இயங்குகின்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்குவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களின் தொழில் பிணக்குகளை தீர்ப்பதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) தலையீடு அவசியம் என என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக பகுதிகளில் அண்மைக் காலமாக குளவி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (29) இடம்பெற்ற இரு வேறு குளவி கொட்டு சம்பவங்களினால் 27 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலாகல தோட்ட தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 14 பேர் ஹப்புத்தளை பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் டிம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தின் கே.ஓ பிரிவில் குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து குளவி கூடு கலைந்து இவ்வாறு தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட 13 பேர்களில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தோட்டத் தொழிலாளர்களுக்கான ரூபா 1000 சம்பளம் என்பது இன்னும் கைக்கு வந்துக் கிடைக்கவில்லை. உண்மையிலேயே ரூபா 750 சம்பளம் கிடைத்தபோது தமக்கு மாதாந்தம் சுமார் ரூபா 20000 சம்பளம் கிடைத்தது.
கொட்டகலை டிரேட்டன் (மண்வெட்டி) தோட்டத்தின் ஸ்மோல் டிரேட்டன் (சின்ன மண்வெட்டி) பிரிவு தொழிலாளர்கள் நேற்று (03) நண்பகல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.