ஏப்ரல் மாத சம்பளத்தில் தமது தொழிற்சங்கங்களுக்கான சந்தா தொகை தமது சம்பளத்தில் இருந்து அறவிடப்படவில்லை என பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
All Stories
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 1000 சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து, பெருந்தோட்ட கம்பனிகளின் உரிமையளர் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கிடையே வேற்றுமை தோன்றாமல் இருப்பதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆயிரம் ரூபா சம்பளத்திற்கான போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வி. இராதாகிரஷ்ணன் தெரிவித்துள்ளார்
சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முந்திய தினமான 5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அடையாள பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்க தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற 20 கிலோ தேயிலை பறிக்க வேண்டும் என்று தோட்ட முகாமை மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (3) முன்னெடுத்துள்ளனர்.
தோட்ட தொழிலாளர் சம்பள விடயத்தில் அரசு தலையீடு வேண்டும் என்று நான் அன்று பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரனை இன்று நடைமுறைக்கு வந்து இருக்கின்றதுஎன்கிறார் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்.
நோர்வூட் பொலிஸ் பிரிவின் இன்ஜஸ்ட்ரி இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட தோட்ட பகுதிகள் நேற்று (03) பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
திட்டத்திற்கான நிதியை ஒதுக்கிவிட்டுத்தான் வரவுசெலவில் முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டு பாராளுமன்றில் வாசிக்கப்படவேண்டும். வாசிக்கப்பட்ட பின்னர் அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகையில் என் தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கொடுக்க மட்டும் எதற்காக பேச்சுவார்த்தை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்.
குளவி தாக்குதல் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் இன்று (26) டிக்கோயா தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும், காணி உரிமை, வீட்டு உரிமை வழங்க வேண்டும் என கோரி தோட்ட தொழிலாளர் மத்திய நிலையம் கொஸ்லந்தை நகரில் இன்று போராட்டத்தை முன்னெடுத்தது.
அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் மக்களுக்காய் குரல் கொடுக்க 5ம் திகதி அடையாள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் நேற்று (21) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.