அக்கரப்பத்தனை, புஸ்சல்லாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 13 தொழிலாளர்கள் பாதிப்பு

அக்கரப்பத்தனை, புஸ்சல்லாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி 13 தொழிலாளர்கள் பாதிப்பு

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் ஜோர்ஜ் பச்சைபங்களா தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் தாக்கியதில் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முற்பகல் 11:30 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட 10 தொழிலாளர்களில் ஆறு பேர் அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆறு பேரில் இருவர் ஆண்களும் நான்கு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அதேநேரம் புஸ்சலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோகம தோட்டத்தின் கீழ்பிரிவில்; 27ஆம் இலக்க தேயிலை மலையில் நேற்று (05) கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளிகளை குளவிகள் தாக்கியதில் மூன்று ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிற்பகல் இரண்டு மணியளவில் குளவி தாக்குதலுக்கு இலக்கானவர்களில் 43 வயதான ஆண் ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனைய இரண்டு தொழிலாளர்களும் புஸ்சலாவை பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிசை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image