தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்க யோசனை

தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்க யோசனை

மலையத்தில் இயங்குகின்ற அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனத்தை உருவாக்குவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

 
ஹட்டனில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மலையக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீரக்கும் நோக்கில், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம், கூட்டு தொழிற்சங்க கமிட்டி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றதாக பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
 
இதன் அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள்மீதான அடக்குமுறையை ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனவும்,  தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனமொன்றை உருவாக்கி, வழிகாட்டல் குழுவை அமைத்து அதன் ஊடாக இவ்விடயங்களை கையாளன வேண்டும் என இணக்கம் காணப்பட்டுள்ளது. 
 
தொழிலாளர் நலன்சார் விடயத்தில் கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன. எனவே, சட்டம் மற்றும் அரசியல் ரீதியில் வௌ;வாறாக அன்றி ஒன்றாக அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழல் இதன்மூலம் உருவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image