குளவி கொட்டுக்கு இலக்காகி 27 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி 27 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு

மலையக பகுதிகளில் அண்மைக் காலமாக குளவி தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (29) இடம்பெற்ற இரு வேறு குளவி கொட்டு சம்பவங்களினால் 27 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக வைத்தியாசலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலாகல தோட்ட தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 14 பேர் ஹப்புத்தளை பங்கட்டி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் டிம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தின் கே.ஓ பிரிவில் குளவிகள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 13 பேர் கொட்டகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து குளவி கூடு கலைந்து இவ்வாறு தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட 13 பேர்களில் 2 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image