தேயிலைக்கான பசளையிடல் குறித்து தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவித்தல்

தேயிலைக்கான பசளையிடல் குறித்து தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிவித்தல்

தேயிலை பயிரிடலுக்காக சேதனப் பசளையை பயன்படுத்துவது தொடர்பான பரிசோதனைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உர தட்டுப்பாட்டுக்கு மத்தியில், தேயிலை பயிரிடலுக்கு அவசியமான உரம் கிடைப்பதில்லை எனத் தெரிவித்து, பல பிரதேசங்களைச் சேர்ந்த பயிர்ச்செய்கையாளர்கள் அண்மைய நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சேதன தேயிலை பயிரிடல் மற்றும் தேயிலை பயிர்ச்செய்கைக்காக சேதனப் பசளையைப் பயன்படுத்தல் என்பன இரு மாறுபட்ட விடயங்களாகும் என தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே, இது குறித்து உரிய ஆய்வுகளை மேறகொண்டதன் பின்னரே நடவடிக்கை எடுக்க முடியும் என தேயிலை ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், தேயிலை பயிரிடலுக்காக கூட்டெருவை உரத்தை உற்பத்தி செய்தல் மற்றும் பயன்படுத்தல் என்பன தொடர்பில், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் வழிகாட்டல் கோவை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வரட்சி காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர், தேயிலை பயிர் நிலத்திற்கு, கூட்டெருவை இடவேண்டும் என்பதுடன், பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரத்துடன், கூட்டெருவை இடுவதன் மூலம், மிகச் சிறந்த பெறுபேற்றைப் பெறலாம் என அந்த வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், அவ்வாறு உரமிடலானது, மேல்நாட்டு, மத்திய மற்றும் கீழ்நாட்டு தேயிலை பயிர் நிலங்களுக்கு, வௌ;வேறு அளவுகளில் இடம்பெற வேண்டும் என்றும் இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில், சேதனப் உரத்தை மாத்திரம் பயன்படுத்துவதனால், உற்பத்தி குறைவடைவதை தவிர்க்க முடியாது என பேராதனை பல்கலைக்கழக விவசாய பீடத்தின், பயிர் அறிவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே தெரிவித்துள்ளார்.

மூலம் - சூரியன் எவ்.எம் செய்திகள்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image