கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை: காவல்துறை இழைத்த தவறுகள்

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை: காவல்துறை இழைத்த தவறுகள்

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒட்டாவா காவல்துறை பல தவறான தகவல் தொடர்புகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனேடிய ஒலிபரப்புக் கழகம் (சிபிசி) இது தொடர்பான தகவலை நேற்று (12) வெளியிட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை இரவு கனடாவின் ஒட்டாவாவின் தலைநகருக்கு அருகில் உள்ள Barrhaven இல் உள்ள வீட்டில் இலங்கைத் தாயும் அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கை ஆணும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்தார்.

பாரிய துப்பாக்கிச்சூடு

ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் இது மிக மோசமான படுகொலையாகும், மேலும் ஒட்டாவா காவல்துறை உண்மைகளை வெளிக்கொண்டுவருதில் பல தவறுகளை செய்துள்ளது.

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு | Ottawa Police Were Wrong In The Canada Murder Case

ஒட்டாவா காவல்துறையினர் செய்த முதல் தவறு இந்த சம்பவத்தை பாரிய துப்பாக்கிச்சூடு என்று முதலில் அழைத்தது என்று கனடியன் பிராட்காஸ்டிங் கோப்பரேஷன் தெரிவித்துள்ளது.

பின்னர், இது கூரிய ஆயுதத்தால் செய்யப்பட்ட கொலை என்று ஒட்டாவா காவல்துறையினர் சரி செய்தனர்.

இந்த சம்பவம் நடந்து ஒட்டாவா நேரப்படி இரவு 10:52 மணிக்கு அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் தெரிவித்தனர். எனினும் சந்தேகநபர் இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

கொலைச் சந்தேக நபரின் பெயரில் குளறுபடி

காவல்துறையினர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டமை பாரிய தகவல் தொடர்பு பிழை எனவும் சிபிசி செய்திச் சேவை கூறுகிறது.

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு | Ottawa Police Were Wrong In The Canada Murder Case

சந்தேக நபரின் பெயர் Fabrio de Soyza என்ற போதிலும், Ottawa காவல்துறை தலைமை அதிகாரி Eric Stubbs அவரை Frank D'Souza Leste என அடையாளப்படுத்தினார்.

மேலும், இறந்தவர்களின் பெயர் பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டது. இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா காவல்துறையினர், கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாகவும் கூறியுள்ளனர்.

காவல்துறையின் திறமையின்மை 

பிராண்டன் பல்கலைக்கழக குற்றவியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் ஸ்னைடர், தவறான தகவல்தொடர்பு காவல்துறையின் திறமையின்மை பற்றிய பொதுக் கருத்தை உருவாக்குகிறது என்று சிபிசி நியூஸ் இற்கு மேற்கோள் காட்டினார்.

கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை : ஒட்டாவா காவல்துறை செய்த மிகப்பெரிய தவறு | Ottawa Police Were Wrong In The Canada Murder Case

இது காவல்துறை மீதான நம்பிக்கையை கெடுக்கும் என்று பேராசிரியர் மேலும் குறிப்பிடுகிறார்.

புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சிறுபான்மையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் காவல்துறையின் இந்த தகவல் தொடர்பு பலவீனம் குறிப்பாகத் தெரியும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை குடும்பத்தாரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில், வேட்டையாடும் கத்திக்கு நிகரான கத்தியே கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஒரு கத்தியா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தற்போது விசாரணையில் உள்ளது.

படுகொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மூலம் - ஐபிசி தமிழ்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image