கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: இறுதிக் கிரியைகள் நாளை
கனடா - ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட ஆறு இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள், நாளை ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெறும் என ஒட்டாவா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
மண்டபம் ஒன்றில் சமய வழிபாடுகள் இடம்பெற்று, இறுதிக் கிரியைகளுக்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என நாட்டில் உள்ள கனேடிய பௌத்த காங்கிரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஒட்டாவாவின் புறநகர் பகுதியான Barrhavan இல் உள்ள வீடொன்றிலிருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஆறு இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 19 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது, கொலை முயற்சி மற்றும் ஆறு முதல்தர கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது